ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து வேலூர் நோக்கி ஒரு கன்டெய்னர் லாரி வந்துகொண்டிருந்தது. அதே நேரத்தில் வேலூரில் இருந்து மேல்மருவத்தூருக்கு அரசு பஸ் சென்றது. மேல்விஷாரம் தனியார் கல்லூரி அருகே சென்றபோது கன்டெய்னர் லாரி, பஸ் மீது மோதுவது போன்று வந்தது. இதனால் பஸ்டிரைவர் பஸ்சை திருப்பி உள்ளார். ஆனாலும் லாரி லேசாக பஸ்மீது மோதியது.

பஸ்சை திருப்பியதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் மீது மோதி சேதமடைந்துள்ளது.

இந்த விபத்தில் பஸ் டிரைவர் மற்றும் பயணி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.