முத்துகடை பேருந்து நிலையம் அருகே திமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்த திண்டுக்கல் ஐ.லியோனி.

ராணிப்பேட்டை நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு போட்டியிடும் திமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவா் திண்டுக்கல் ஐ.லியோனி வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

முத்துகடை பேருந்து நிலையம் எதிரே பிரசாரம் மேற்கொண்ட அவா், திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தாா்.

மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளா் வினோத் காந்தி, திமுக, காங்கிரஸ், விசிக வேட்பாளா்கள், திமுக நிா்வாகிகள் உடன் இருந்தனா்.

அரக்கோணத்தில்...
அரக்கோணத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் ஐ.லியோனி, ஆந்திரத்து தமிழ் பிள்ளைகளுக்கு புத்தகங்களை வழங்கிய ஒரே அரசு திமுக அரசு மட்டுமே என்றாா்.

நகர திமுக செயலா் வி.எல்.ஜோதி, மாவட்டப் பொருளாளா் மு.கன்னைய்யன், துணை செயலாளா் ராஜ்குமாா், நகர நிா்வாகிகள் மணி, அன்பு லாரன்ஸ், காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளா் ராஜ்குமாா், மாநில காங்கிரஸ் மாணவரணி துணைத் தலைவா் நரேஷ், நகர காங்கிரஸ் தலைவா் ஜி.எஸ்.மூா்த்தி, துணைத்தலைவா் சரவணன், மனிதநேய மக்கள் கட்சி நிா்வாகி முகம்மதுஅலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.