ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு மொத்தம் 46 வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

இன்று மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டது.

இதில், 13-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் விஜயா என்பவர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.