குறள் : 668

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்

மு.வ உரை :

மனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றத் தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்.

கலைஞர் உரை :

மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை :

மனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தடுமாறாமல் தாமதிக்காமல் செய்க.

Kural 668

Kalangaadhu Kanta Vinaikkan Thulangaadhu
Thookkang Katindhu Seyal

Explanation :

An act that has been firmly resolved on must be as firmly carried out without delay.


Horoscope Today: Astrological prediction for February 20, 2022

இன்றைய ராசிப்பலன் - 20.02.2022


இன்றைய பஞ்சாங்கம்

20-02-2022, மாசி 08, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி இரவு 09.05 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. அஸ்தம் நட்சத்திரம் மாலை 04.42 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் 

மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. 

இன்றைய ராசிப்பலன் - 20.02.2022 | Today rasi palan - 20.02.2022


மேஷம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். பெரியவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேற கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிட்டும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். வாகன பழுதிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிள்ளைகள் வழியில் மனசங்கடங்கள் உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். குடும்பத்தில் பெண்களுக்கு பணிச்சுமை குறையும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கிய ரீதியாக எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வராத கடன்கள் வசூலாகும்.
கடகம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தினரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் அனுகூலமான மாற்றங்கள் உண்டாகும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு வரவிற்கேற்ற செலவுகள் இருக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பண நெருக்கடிகளை சமாளிக்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிட்டும். வியாபார ரீதியாக அனுகூலங்கள் உண்டாகும்.
கன்னி
இன்று உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். தரும காரியங்கள் செய்து நிம்மதி அடைவீர்கள்.
துலாம்
இன்று மருத்துவ செலவுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். பண நெருக்கடிகளால் மன நிம்மதி குறையும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். எந்த செயல் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று காலையிலேயே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன் பொருள் வாங்கும் யோகம் கிட்டும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.
தனுசு
இன்று உங்களுக்கு இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். நடக்காது என்று நினைத்த காரியம் கூட இன்று நடைபெறும்.
மகரம்
இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.
கும்பம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத டென்ஷன் ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
மீனம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஈடுபாடின்றி இருப்பீர்கள். பயணங்களால் அலைச்சலும் உடல் சோர்வும் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். வீண் செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,