10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும்- அமைச்சர் அன்பில் மகேஷ்

10, 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு சரிவர நடைபெறாத நிலையில் இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால் இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.