கரிசலாங்கண்ணி கீரை சுண்டல்

தேவையான பொருள்கள் அளவு
கரிசலாங்கண்ணிக் கீரை ஒரு கட்டு
சிறு பருப்பு 100 கிராம்
சின்ன வெங்காயம் 50 கிராம்
மிளகாய் வற்றல் 5
பூண்டு 6 பல்
தக்காளி 2
மிளகு, மஞ்சள்தூள், சீரகம் தலா ஒரு ஸ்பூன்
தேங்காய்த் துருவல் 2 கைப்பிடி
பெருங்காயம் கால் ஸ்பூன்
எண்ணெய் உப்பு தேவையான அளவு
தேவையான பொருள்கள் :


செய்முறை :


கீரையைச் சுத்தம் செய்து நறுக்கி, மிளகு, சீரகம் தட்டிச் சேர்த்து மஞ்சள், ஒரு கட்டு சிறுபருப்பு இரண்டையும் சேர்த்து வேக வைக்கவும். பிறகு, வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாயைக் கிள்ளிப்போட்டு வதக்கி, வெங்காயம், பூண்டு. தக்காளி, தேங்காயத் துருவல் ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கி வேகவைத்து எடுத்த கீரையைக் கடைந்து இதனுடன் சேர்த்துப் பெருங்காயம் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்புப் போட்டு இறக்கவும். இந்தக் கரிசலாங்கண்ணிக் கீரைக் கடைசல், உணர்வுகளை நெறிப்படுத்தக் கூடியது. கண் பார்வையைக் கூர்மையடையச் செய்யவும்.