பிரண்டைத் துவையல் 

Pirandai Thuvaiyal Recipe-Pirandai Benefits

தேவையான பொருள்கள் அளவு
பிரண்டை இலை 100 கிராம்
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 3 பல்
மிளகு 5
மிளகாய் வற்றல் 3
கறிவேப்பிலை தேவையான அளவு
கொத்தமல்லி தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்செய்முறை :


இஞ்சி, பூண்டு, மிளகு, மிளகாய் வற்றல், மஞ்சள் தூள் ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும். பிறகு பிரண்டை இலை, கறிவேப்பிலை. கொத்தமல்லி ஆகியவற்றைக் கொஞ்சம் நெய் சேர்த்து வதக்கி, ஏற்கனவே அரைத்து வைத்து உள்ளதையும் சேர்த்து அரைத்து தேவைக்கு உப்பு சேர்த்துக் கொள்ளவும். பிரண்டை இலைக்குப் பதிலாக பிரண்டைத் தண்டைப் பயன்படுத்தியும் துவையல் செய்யலாம். இந்தத் துவையலை அடிக்கடிச் சாப்பிட்டால் இதய நோய்கள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், குடற்புண், மூல நோய்கள் போன்றவை குணமாகும்.