நாளை முதல் 100 சதவீத அனுமதி ; தென்னக ரயில்வே அறிவிப்பு
சென்னையில் மின்சார ரயில்கள் நாளை முதல் 100 சதவீதம் இயங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் குறைந்த நிலையில் சென்னையில் மின்சார ரயில்கள் நாளை முதல் 100 சதவீதம் இயங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று பரவல் குறைந்த உள்ளதால், சென்னையில் மின்சார ரயில்கள் நாளை முதல் 100 சதவீதம் இயங்கும். வார நாட்களில் 658 மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.