உக்ரைன்‌ நாட்டில்‌ மருத்‌துவம்‌ படிக்கச்‌ சென்ற மாணவர்களை மீட்டு தமிழகம்‌ அழைத்து வரக்‌ கோரி பெற்றோர்‌ ராணிப்‌பேட்டை கலெக்டர்‌ அலவு வலகத்தில்‌ நேற்று மனு அளித்தனர்‌. 

வாலாஜா பெருமாள்‌ கோவில்‌ தெருவைச்‌ சேர்ந்த கணேச பெருமாள்‌ என்பவர்‌ அளித்த மனுவில்‌ கூறியிருப்பதாவது: எனது மகள்‌ அனிதா உக்ரைனில்‌ உள்ள நேஷ்னல்‌ பிரோகோவ்‌ மெமோரியல்‌ மெடிக்‌ கல்‌ யூனிவர்சிட்டியில்‌ 3ம்‌ அண்டு மருத்துவம்‌ படித்து வருகறார்‌. 

மேலும்‌, அங்கு போர்‌ நடந்து வருவதால்‌ அபாயகரமான சூழல்‌ ஏற்பட்‌டுள்ளது. எனவே, எனது மகள்‌ அனிதாவை மத்‌திய, மாநில அரசுகள்‌ மூலமாக பத்திரமாக மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்‌. இவ்வாறு அந்த மனுவில்‌ கூறப்பட்‌டுள்ளது. 

அதேபோல்‌, ஆற்காடு தோப்புகானா வேல்முருகன்‌ தெருவைச்‌ சேர்ந்த சூரியநாராயணன்‌ என்‌பவர்‌ அளித்த மனுவில்‌ கூறியிருப்பதாவது. எனது மகன்‌ ராஜ்‌ உக்ரைன்‌ நாட்டில்‌ உள்ள கார்கவ்‌ நகரில்‌ உள்ள வி.என்‌. கராசின்‌ கார்கிவ்‌ நேஷ்‌னல்‌ யூனிவர்சிட்டியின்‌ மருத்துவக்‌ கல்லூரியில்‌ 4ம்‌ அண்டு மருத்துவம்‌ படித்து வருகிறார்‌. தற்‌போது அங்கு போர்‌ நடந்து வருவதால்‌, எனது மகனை பத்திரமாக மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள்‌ மூலம்‌ அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்‌. இவ்வாறு அந்த மனுவில்‌ கூறப்பட்‌டுள்ளது. அதேயபோல்‌, வாலாஜா ஒன்றியம்‌ நரசிங்கபுரம்‌ பகுதியை சேர்ந்த அர்‌.குணசேகரின்‌ மகள்‌ பூஜா குணசேகர்‌ மற்றும்‌ வடகால்‌ ராஜஐசேகர்‌ மகன்‌ சுபாஷ்‌ சந்திரன்‌ ஆகியோர்‌ உக்ரைன்‌ நாட்‌டில்‌ எம்பிபிஎஸ்‌ இறுது அண்டு படித்துவருகறார்‌கள்‌. அவர்களை தமிழ்‌ நாட்டிற்கு அழைத்து வர உதவி கேட்டு அமைச்சர்‌ ஆர்‌.காந்தியிடம்‌ மனு அளித்தனர்‌. இதையடுத்து அமைச்‌சர்‌ மாநிலங்களவை உறுப்‌பினர்‌ எம்‌.எம்‌.அப்துல்‌லாவை, திமுக மாநில சுற்றுச்‌ரூழல்‌ ௮ணி துணை செயலாளர்‌ வினோத்காந்தி தொடர்பு கொண்டு மாணவர்களை மீட்கநடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்‌. அதற்கு அவர்‌ நடவடிக்கை எடுப்பதாக கூறினார்‌. இதைத்தொடர்ந்து வீடியோ கால்‌ மூலம்‌ உக்ரைனில்‌ உள்ள பூஜா குணசேகரை அமைச்சர்‌ ஆர்‌.காந்தி தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதி அளித்தார்‌. 


கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்பு


உக்ரைன் நாட்டில் உள்ள மாணவர்களை மீட்கும் வகையில் அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையர் ஜெசிந்தாலாசரஸ் ஐஏஎஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1070வில் தொடர்புகொள்ளலாம். மேலும், 9445869848, 9600023645. 9940256444, 044-28515288 என்ற எண்களிலும், nrtchen [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம். அதேபோல், புதுடில்லியில் தமிழ்நாடு பொதிகை இல்லத்தில் உள்ள உக்ரைன் அவசர உதவி மையத்தின் வாட்ஸ் அப் எண்: 9289516716, மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்