அரக்கோணம் நகராட்சி 8வது வார்டில் சமூக ஆர்வலரும், திமுக பிரமுகருமான ஜெனீஷ்குமாரின் உறவினரான பிரியதர்ஷினி திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். முதுகலை பட்டதாரியான இவர், மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தேர்தலில் களம் இறங்கியுள்ளார். 

இவர் வார்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள்:
அரக்கோணம் 8வது வார்டுக்கு உட்பட்ட குறிஞ்சிநகர், காமராஜர் நகர், ஜெகஜீவன்ராம் ரோடு, ஆப்பிள்ஸ்பேட்டை, காலி வாரிகண்டிகைக்கு உட்பட்ட 4 தெருக்களில் அடிப்படை வசதிகளான சுகாதாரம், குடிநீர், தெரு விளக்கு வசதி ஆகியன போர்க்கால அடிப்படையில் செய்து தருவேன்.

ஜெகஜீவன்ராம் ரோடு பகுதியில் 40 ஆண்டுகளாக 150 குடும்பத்தினர் மனைப்பட்டா இல்லாமல் வசிக்கின்றனர். அவர்களுக்கும், காலிவாரிகண்டிகை மெயின்ரோட்டில் வசிக்கும் 40 குடும்பத்தினருக்கும் மனைப்பட்டா வாங்கித்தர நடவடிக்கை எடுப்பேன். அருகிலுள்ள கம்பெனியில் இளைஞர் மற்றும் பெண்களுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். விலையில்,

அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இலவச வீடுகள் கட்டித்தரப்படும். இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானம், உடற் பயிற்சிகூடம், ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு உடனடியாக ரேஷன் கார்டு வாங்கித்தரப்படும். இங்கு 'ஸ்மார்ட் டாய்லெட்' அமைத்து சுகாதாரமான வார்டாக மாற்றிக்காட்டு வேன். அரசின் திட்டங்கள், அனைத்தும் உடனுக்குடன் பெற்றுத்தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.