ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் ஆற்காட்டில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல்.

நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் ஆற்காடு நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் 3 வார்டுகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அதிமுக சார்பில் போட்டியிடுகின்றனர். மாவட்ட அதிமுக இணைச் செயலாளரும், ஆற்காடு நகராட்சி முன்னாள் துணை சேர்மனுமான கீதாசுந்தர் 27-வது வார்டிலும், இவரது கணவர் முன்னாள் கவுன்சிலர் சுந்தர் 30வது வார்டிலும், இவர்களது மகன் மாவட்ட அதிமுக மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் பிரவீன்குமார் 14-வது வார்டிலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

கீதாசுந்தர் 2 முறை நகராட்சி கவுன்சிலராகவும் ஒருமுறை துணைச் சேர்மனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். சுந்தர் ஒருமுறை நகராட்சி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.