👉 1868ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி பட்டம் பெற்றவர்களில் முதலாம் ஆப்பிரிக்க அமெரிக்கர் டபிள்யூ.இ.பி.டுபோய்ஸ் பிறந்தார்.

👉 1947ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி உலக தரநிர்ணய அமைப்பு (ISO) ஆரம்பிக்கப்பட்டது.

👉 1855ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி கணித உலகத்தில் மிக சிறந்தவர்களுள் ஒருவரான கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் (Johann Carl Friedrich Gauss) மறைந்தார்.


பிறந்த நாள் :-


மைக்கேல் டெல்

💻 கணினி விற்பனையில் முன்னிலையில் இருக்கும் டெல் நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் டெல் 1965ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பிறந்தார்.

💻 இவர் தனது தந்தை வாங்கி தந்த புது ஆப்பிள் கம்யூட்டரை தனி தனியாகப் பிரித்து, பிறகு சரியாக பொருத்தி கணினி பற்றி கற்றுக்கொண்டார்.

💻 கணினியின் வடிவமைப்பு குறித்தும், வர்த்தக ரீதியாகவும் பல விஷயங்களை அறிந்தார். டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் தனது விடுதி அறையிலேயே பி.சி.லிமிடெட் என்ற பெயரில் ஒரு நிறுவனம் தொடங்கினார்.

💻 அங்கேயே, கணினியின் உதிரிபாகங்களை வாங்கி, அவற்றை பொருத்தி கணினியை உருவாக்கி விற்க ஆரம்பித்தார். அதிக லாபம் கிடைத்ததால் 19 வயதில் படிப்பை நிறுத்திவிட்டு, முழு மூச்சாக தொழிலில் இறங்கினார்.

💻 வாடிக்கையாளர்கள் எளிதில் தொடர்புக்கொண்டு தங்கள் தேவைகள், குறைகளை தெரிவிக்க தொலைபேசி, இணையம், நேரடி சந்திப்பு என பல வசதிகளை செய்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தார்.

💻 பிறகு 1987ஆம் ஆண்டு நிறுவனத்தின் பெயரை 'டெல் கம்ப்யூட்டர் கார்ப்பரேஷன்' என மாற்றினார். 1992ஆம் ஆண்டு ஃபார்ச்சூன் இதழின் 'டாப் 500' நிறுவனங்களின் பட்டியலில் டெல் இடம்பிடித்தது. அப்போது இவருக்கு வயது 27. அந்த பட்டியலில் மிகவும் இளமையான சிஇஓ இவர்தான்.

இன்றைய தின நிகழ்வுகள்


532 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் ஜஸ்டினியன் கான்ஸ்டண்டினோபிலில் புதிய மரபுவழித் திருச்சபை பசிலிக்கா ஏகியா சோபியாவைக் கட்ட உத்தரவிட்டார்.1455 – முதலாவது மேற்கத்திய நூல் கூட்டன்பர்கு விவிலியம் நகரும் அச்சு மூலம் அச்சிடப்பட்டது.

1820 – பிரித்தானிய அமைச்சர்கள் அனைவரையும் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட திட்டம் வெளிச்சத்திற்கு வந்தது.

1836 – டெக்சாசுப் புரட்சி: அலாமா போருக்கு முன்னோடியான அலாமா முற்றுகை அமெரிக்காவில் சான் அந்தோனியோ நகரில் ஆரம்பமானது.

1847 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: மெக்சிக்கோவின் புவெனா விஸ்டா நகரில் சக்கரி தைலர் தலைமையிலான அமெரிக்கப் படைகள் மெக்சிக்கோ படைகளைத் தோற்கடித்தன.

1854 – ஆரஞ்சு இராச்சியத்தின் அதிகாரபூர்வமான விடுதலை அறிவிக்கப்பட்டது.

1861 – அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபிரகாம் லிங்கன் பால்ட்டிமோர், மேரிலாந்து பால்ட்டிமோர் நகரில் நடந்த படுகொலை முயற்சியை முறியடித்த பின்னர், வாசிங்டன், டி. சி.க்கு இரகசியமாக வந்திறங்கினார்.

1870 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மிசிசிப்பியில் இராணுவ ஆட்சி முடிவடைந்து அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைக்கப்பட்டது.

1885 – சீன-பிரெஞ்சுப் போர்: பிரெஞ்சு இராணுவம் வியட்நாமில் டொங் டாங் சமரில் முக்கிய வெற்றியைப் பெற்றது.

1886 – சார்லஸ் மார்ட்டின் ஹால் முதலாவது செயற்கை அலுமினியத்தை உருவாக்கினார்.

1887 – பிரெஞ்சு ரிவியேராவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.

1903 – கியூபா குவாண்டானமோ விரிகுடாவை ஐக்கிய அமெரிக்காவுக்கு முடிவற்ற குத்தகைக்குக் கொடுத்தது.

1904 – ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் உரிமையை 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்குப் பெற்றுக் கொண்டது.

1905 – சிகாகோவில் ரோட்டரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

1917 – சென் பீட்டர்ஸ்பேர்க்கில் முதலாவது மக்கள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதன் மூலம் பெப்ரவரிப் புரட்சி ஆரம்பமானது. (கிரெகொரியின் நாட்காட்டியில் மார்ச் 8).

1927 – செருமானிய கோட்பாட்டு இயற்பியலாளர் வெர்னர் ஐசன்பர்க் தனது அறுதியின்மைக் கொள்கை பற்றி முதற் தடவையாக வெளியிட்டார்.

1934 – மூன்றாம் லியோபோல்ட் பெல்சியத்தின் மன்னராக முடிசூடினார்.

1941 – புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டுப் பிரித்தெடுக்கப்பட்டது.

1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய நீர்மூழ்கிகள் கலிபோர்னியாவின் சான்டா பார்பரா கரையோரப் பகுதிகளில் எரிகணைகளை ஏவின.

1943 – அயர்லாந்தில் கவன் மாவட்டத்தில் புனித யோசேப்பு அனாதை மடம் தீப்பற்றியதில் 35 சிறுவர்கள் உயிரிழ்ந்தனர்.

1944 – சோவியத் ஒன்றியம் செச்சினிய மற்றும் இங்குசேத்திய மக்களை வடக்கு காக்கேசியாவில் இருந்து மத்திய ஆசியாவுக்குக் கட்டாயமாக நாடு கடத்த ஆரம்பித்தது.

1945 – இரண்டாம் உலகப் போர்: போசுனான் நகரம் சோவியத், போலந்து படையினரால் விடுவிக்கப்பட்டது.

1945 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சின் தலைநகர் மணிலா அமெரிக்கப் படைகளினால் சப்பானியரிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.

1947 – சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1954 – போலியோவிற்கு எதிரான சால்க் தடுப்பு மருந்து ஏற்றும் திட்டம் பிட்ஸ்பர்க், பென்சில்வேனியாவில் ஆரம்பிக்கப்பட்டது.

1966 – சிரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசு கவிழ்க்கப்பட்டது.

1987 – சுப்பர்நோவா “1987ஏ” தென்பட்டது.

1991 – தாய்லாந்தில் இராணுவத் தலைவர் சுந்தொங் கொங்சொம்பொங் தலைமையில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் பிரதமர் சட்டிச்சாய் சூன்ஹாவென் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1997 – உருசியாவின் மீர் விண்வெளி நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டது.

1998 – மத்திய புளோரிடாவில் இடம்பெற்ற சுழற்காற்றில் 42 பேர் உயிரிழந்தனர்.

1999 – குர்தியக் கிளர்ச்ச்சித் தலைவர் அப்துல்லா ஓசுலான் துருக்கியின் அங்காரா நகரில் தேச்த்துரோகக் குற்றம் சாட்டப்பட்டார்.

2007 – இங்கிலாந்தில் கிறேரிக் என்ற இடத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதில் ஒருவர் கொல்லப்பட்டு 22 பேர் காயமடைந்தனர்.

2008 – அமெரிக்க வான்படையின் பி-2 ஸ்பிரிட் குண்டுவீச்சு விமானம் குவாமில் வீழ்ந்து நொறுங்கியது.

இன்றைய தின பிறப்புகள்


1633 – சாமுவேல் பெப்பீசு, பிரித்தானியக் கடற்படைத் தளபதி, அரசியல்வாதி (இ. 1703)1685 – ஜார்ஜ் ஃபிரிடெரிக் ஹாண்டெல், செருமானிய-ஆங்கிலேய இசைக்கலைஞர் (இ. 1759)

1868 – டபிள்யூ. இ. பி. டுபோய்ஸ், அமெரிக்க வரலாற்றாளர் (இ. 1963)

1883 – கார்ல் ஜாஸ்பெர்ஸ், செருமனிய-சுவிட்சர்லாந்து மெய்யியலாளர், உலவியலாளர் (இ. 1969)

1903 – ஜுலியஸ் பூசிக், செக்கோசுலோவாக்கிய ஊடகவியலாளர், செயற்பாட்டாளர், பொதுவுடைமைவாதி (இ. 1943)

1929 – சி. வடிவேலு, மலேசியத் தமிழ் எழுத்தாளர் (இ. 1992)

1954 – ராஜினி திராணகம, இலங்கை மருத்துவர், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர், கல்வியாளர் (இ. 1989)

1965 – மைக்கேல் டெல், அமெரிக்கத் தொழிலதிபர்

1983 – பாக்யஸ்ரீ, இந்திய நடிகை

1981 – ஜோஷ் கட், அமெரிக்க நடிகர்

1983 – அசீஸ் அன்சாரி, அமெரிக்க நடிகர்

1983 – சக்தி வாசு, தமிழக நடிகர்

இன்றைய தின இறப்புகள்


1503 – அன்னமாச்சாரியார், கருநாடக இசைப் பாடகர் (பி. 1408)1719 – சீகன் பால்க், செருமானிய மதகுரு (பி. 1682)

1821 – ஜோன் கீற்ஸ், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1795)

1848 – ஜான் குவின்சி ஆடம்ஸ், அமெரிக்காவின் 6வது அரசுத்தலைவர் (பி. 1767)

1855 – கார்ல் ஃப்ரெடெரிக் காஸ், செருமானியக் கணிதவியலாளர்,. வானியலாளர், இயற்பியலாளர் (பி. 1777)

1969 – மதுபாலா, இந்திய நடிகை (பி. 1933)

1977 – ஈ. வெ. கி. சம்பத், தமிழக அரசியல்வாதி (பி. 1926)

2014 – ஜி. பூவராகவன், தமிழக அரசியல்வாதி (பி. 1927)

2015 – ஆர். சி. சக்தி, இந்தியத் திரைப்பட இயக்குநர்

இன்றைய தின சிறப்பு நாள்


குடியரசு நாள் (கயானா)