👉 1940ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி ரேடியோ கார்பன் என்ற கார்பன்-14 (Carbon-14) கண்டுபிடிக்கப்பட்டது.

👉 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா (எஸ்.ரங்கராஜன்) மறைந்தார்.


நினைவு நாள் :-


சந்திரசேகர ஆசாத்

👉இந்திய விடுதலைப் போராட்ட புரட்சி வீரர் சந்திரசேகர ஆசாத் 1906ஆம் ஆண்டு ஜீலை 23ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் சந்திரசேகர சீதாராம் திவாரி ஆகும்.

👉15 வயதில் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஒப்படைத்த போது, நீதிபதி இவரிடம் முகவரியை கேட்டதற்கு தந்தை பெயர் ஆசாத் (விடுதலை), முகவரி சிறை என்று பதில் கூறினார்.

👉கோபம் அடைந்த நீதிபதி அவரை 15 பிரம்படி கொடுத்து சிறையில் அடைக்க சொன்னார். ஆசாத், ஒவ்வொரு அடி விழும்போதும் 'பாரத் மாதா கீ ஜெய்' என முழங்கினார். பிறகு இவர் 'சந்திரசேகர ஆசாத்' என்று அழைக்கப்பட்டார்.

👉சுதந்திரத்தை அடைய, இந்துஸ்தான் குடியரசு அமைப்பைத் தொடங்கிய ராம் பிரசாத் பிஸ்மில்லின் அமைப்பில் இணைந்தார். பகத்சிங் உட்பட பல புரட்சியாளர்களுக்கு இவர் வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.

👉லாலா லஜ்பத்ராயின் மரணத்துக்கு காரணமாக இருந்த போலீஸ் அதிகாரியை சுட்டதால், 1931ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி இவரை ஆங்கிலேய காவல்துறையினர் சுற்றி வளைத்து போது பிடிபடக்கூடாது என்று தன்னைத்தானே (24 வயது) சுட்டுக்கொண்டார்.


பிறந்த நாள் :-


விஜய் சிங் பதிக்

🌟 சுதந்திரப் போராட்ட வீரரான விஜய் சிங் பதிக் 1882ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி உத்திரப் பிரதேசத்தில் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் பிறந்தார்.

🌟 இளம் வயதிலேயே விடுதலைப் போராட்டப் புரட்சி இயக்கத்தில் இணைந்தார். இவரது இயற்பெயர் பூப் சிங் குர்ஜர். இவரது பெற்றோர் இவர் பெயரை விஜய் சிங் பதிக் என்று மாற்றினர்.

🌟 ஆங்கிலேயர்கள் வரி வசூலிப்பதை நிறுத்த ஒவ்வொரு கிராமத்திலும் கிஸான் பஞ்சாயத்தின் கிளைகள் தொடங்கப்பட்டன. விவசாயிகளின் நலனுக்காக பிஜவுலியா கிஸான் ஆந்தோலன் என்ற பெயரில் சத்தியாக்கிரக இயக்கத்தை இவர் நடத்தினார்.

🌟 இவரது அயராத முனைப்புகளால் விவசாயிகளுக்கு மகத்தான வெற்றி கிட்டியது. தன் எழுத்துக்களாலும் பேச்சாலும் மக்களிடையே சுதந்திரப் போராட்ட வேட்கையை உண்டாக்கினார். அஜய் மேரு என்ற இவரது நாவல் மிகவும் பிரபலமானது.

🌟 புரட்சி வீரராக தனது வாழ்நாள் முழுவதும் தேச சேவையில் ஈடுபட்ட, தன்னலமற்று சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவருமான விஜய் சிங் பதிக் 72ம் வயதில் (1954) மறைந்தார்.

இன்றைய தின நிகழ்வுகள்


380 – அனைத்து உரோமைக் குடிமக்களும் திரித்துவக் கிறித்தவத்தைத் தழுவ வேண்டும் என பேரரசர் முதலாம் தியோடோசியசு கேட்டுக் கொண்டார்.

425 – கான்ஸ்டண்டினோபில் பல்கலைக்கழகம் பேரரசர் இரண்டாம் தியோடோசியசினால் நிறுவப்பட்டது.

907 – கித்தான் இனத் தலைவர் ஆபோஜி வடக்கு சீனாவில் பேரரசர் தைசூ என்ற பெயரில் லியாவோ அரசமரபைத் தோற்றுவித்தார்.

1560 – இசுக்கொட்லாந்தில் இருந்து பிரான்சியரை வெளியேற்ற இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

1594 – பிரான்சின் மன்னனாக நான்காம் என்றி முடிசூடினார்.

1700 – புதிய பிரித்தானியா தீவு கண்டுபிடிக்கப்பட்டது.

1782 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்காவில் போரைத் தொடர்வதற்கு எதிராக பிரித்தானிய நாடாளுமன்றம் வாக்களித்தது.

1801 – வாசிங்டன், டீசி நகரம் அமெரிக்க காங்கிரசின் நிர்வாகத்தின் கீழ் வந்தது.

1844 – டொமினிக்கன் குடியரசு எயிட்டியிடம் இருந்து விடுதலை அடைந்தது.

1861 – போலந்தில் உருசிய ஆக்கிரமிப்பை எதிர்த்து வார்சாவாவில் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தியதில், ஐந்து பேர் உருசியப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1898 – கிரேக்க மன்னர் முதலாம் ஜோர்ஜ் படுகொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.

1900 – பிரித்தானியத் தொழிற் கட்சி அமைக்கப்பட்டது.

1900 – இரண்டாம் பூவர் போர்: தென்னாபிரிக்காவில் பூவர்களின் தளபதி பியெட் குரோனியே நிபந்தனையின்றி சரணடைவதாக அறிவித்தார்.

1902 – இரண்டாம் பூவர் போர்: ஆத்திரேலிய இராணுவத்தினர் இருவர் போர்க்குற்றங்களுக்காக தென்னாப்பிரிக்கா, பிரிட்டோரியாவில் தூக்கிலிடப்பட்டனர்.

1933 – பெர்லினில் செருமனியின் நாடாளுமன்றக் கட்டடம் இடச்சு கம்யூனிஸ்டுகளால் தீ வைத்து எரிக்கப்பட்டது.

1939 – அமர்ந்துறை வேலை நிறுத்தங்கள் நில உரிமையாளர்களின் உரிமையை மீறுவதால், இவ்வகை வேலைநிறுத்தங்கள் சட்டவிரோதமானவை என ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1940 – ரேடியோகார்பன் என்ற கரிமம்-14 கண்டுபிடிக்கப்பட்டது.

1942 – இரண்டாம் உலகப் போர்: சாவகக் கடலில் இடம்பெற்ற சமரில் கூட்டுப் படைகளை சப்பான் படைகள் தோற்கடித்தன.

1943 – பெர்லினில், நாட்சிகளின் இரகசியக் காவல்துறையினர் செருமனியப் பெண்களை மணந்த 1,800 யூத இன ஆண்களைக் கைது செய்தனர்.

1943 – அமெரிக்காவின் மொன்ட்டானாவில் பெயர்கிரீக் நகரில் சுரங்கம் ஒன்று வெடித்ததில் 74 பேர் கொல்லப்பட்டனர்.

1951 – ஐக்கிய அமெரிக்காவில் அரசுத்தலைவர் ஒருவர் இருதடவைகளுக்கு மேல் போட்டியிட முடியாதவாறு அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.

1964 – பீசாவின் சாய்ந்த கோபுரம் மேலும் சரிவதைத் தடுக்க இத்தாலிய அரசு உதவி கோரியது.

1976 – முன்னாள் எசுப்பானிய நாடான மேற்கு சகாரா சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு என்ற பெயரில் விடுதலையை அறிவித்தது.

1991 – வளைகுடாப் போர்: அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் குவைத் விடுதலையானதாக அறிவித்தார்.

2002 – கோத்ரா தொடருந்து எரிப்பு: அயோத்தியாவில் இருந்து தொடருந்தில் திரும்பிக்கொண்டிருந்த 59 இந்துப் பயணிகள் கோத்ரா புகையிரத நிலையத்தில் வைத்து முசுலிம்களால் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் நடந்த கலவரத்தில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

2004 – 1995 டோக்கியோ மெட்ரோ தாக்குதல்களைத் திட்டமிட்டதாகக் குற்ரம் சாட்டப்பட்ட சோக்கோ அசகாரா என்ற மதக்குழுத் தலைவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இவரது மரணதண்டனை 2018 இல் நிறைவேற்றப்பட்டது.

2004 – பிலிப்பீன்சில் பயணிகள் கப்பலில் அபு சயாப் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பில் 116 பேர் கொல்லப்பட்டனர்.

2007 – மட்டக்களப்பு நகரில் உள்ள இலங்கை விமானப் படையினரின் விமான ஓடுபாதையை நோக்கி விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட எறிகணை வீச்சில் இலங்கைக்கான அமெரிக்க, இத்தாலியத் தூதுவர்கள் காயமடைந்தனர்.

2010 – சிலியில் 8.8 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 500 பேர் உயிரிழந்தனர்.

2013 – சுவிட்சர்லாந்தில் தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஐவர் கொல்லப்பட்டனர்.

2015 – உருசிய அறிவியலாளரும், அரசியல்வாதியுமான போரிசு நெம்த்சோவ் கிரெம்லின் அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இன்றைய தின பிறப்புகள்


272 – முதலாம் கான்ஸ்டன்டைன், உரோமைப் பேரரசர் (இ. 337)

1807 – ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ, அமெரிக்கக் கவிஞர் (இ. 1882)

1897 – பெர்னார்டு இலியோத், பிரான்சிய வானியலாளர் (இ. 1952)

1902 – லூசியோ கோஸ்தா, பிரான்சிய-பிரேசில் கட்டிடக்கலைஞர் (இ. 1998)

1903 – கியூலியோ நட்டா, நோபல் பரிசு இத்தாலிய வேதியியலாளர் (இ. 1979)

1912 – குசுமாகரசு, இந்திய எழுத்தாளர், கவிஞர் (இ. 1999)

1926 – டேவிட் ஹண்டர் ஹியூபெல், நோபல் பரிசு கனடிய உடலியங்கியலாளர், நரம்பியலாளர்

1932 – எலிசபெத் டெய்லர், ஆங்கிலேய-அமெரிக்க நடிகை (இ. 2011)

1934 – ரால்ஃப் நேடர், அமெரிக்க அரசியல்வாதி, செயற்பாட்டாளர்

1943 – பி. எஸ். எடியூரப்பா, இந்திய அரசியல்வாதி

1962 – இராபர்ட் ஸ்பென்சர், அமெரிக்க எழுத்தாளர்

1967 – ஜோனாதன் ஐவ், ஆங்கிலேய உற்பத்திப் பொருள் வடிவமைப்பாளர்

1975 – கிறிஸ்டோபர் பி. லாண்டன், அமெரிக்க இயக்குநர்

1977 – ஜேம்ஸ் வான், மலேசிய-ஆத்திரேலிய இயக்குநர்

1982 – புருனோ சோரெசு, பிரேசிலிய டென்னிசு வீரர்

1983 – முகமது நபௌசு, லிபிய ஊடகவியலாளர் (இ. 2011)

1986 – சந்தீப் சிங், இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர்

இன்றைய தின இறப்புகள்


1712 – முதலாம் பகதூர் சா, முகலாயப் பேரரசர் (பி. 1643)

1906 – சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே, அமெரிக்க வானியலாளர், இயற்பியலாளர் (பி. 1834)

1931 – சந்திரசேகர ஆசாத், இந்திய செயற்பாட்டாளர் (பி. 1906)

1936 – இவான் பாவ்லோவ், நோபல் பரிசு பெற்ற உருசிய மருத்துவர் (பி. 1849)

1939 – நதியெஸ்தா குரூப்ஸ்கயா, உருசியப் புரட்சியாளர், அரசியல்வாதி, கல்வியாளர் (பி. 1869)

1956 – கணேஷ் வாசுதேவ மாவ்லங்கர், இந்திய அரசியல்வாதி (பி. 1888)

1983 – நிகோலாய் அலெக்சாந்திரோவிச் கொசூரேவ், உருவிய வானியலாளர், வானியற்பியலாளர் (பி. 1908)

1993 – லில்லியன் கிஸ், அமெரிக்க நடிகை (பி. 1893)

1998 – ஜார்ஜ் எச் ஹிட்சிங்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருந்தியலாளர் (பி. 1905)

2005 – புகழேந்தி, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1929)

2008 – சுஜாதா, தமிழக எழுத்தாளர் (பி. 1935)

2010 – நானாஜி தேஷ்முக், இந்திய செயற்பாட்டாளர் (பி. 1916)

2012 – வேலூர் ஜி. ராமபத்ரன், தமிழக மிருதங்கக் கலைஞர் (பி. 1929)

2014 – ந. பாலேஸ்வரி, ஈழத்துப் புதின எழுத்தாளர் (பி. 1929)

2015 – போரிசு நெம்த்சோவ், உருசிய அரசியல்வாதி (பி. 1959)

இன்றைய தின சிறப்பு நாள்


தேசிய மருத்துவர்கள் நாள் (வியட்நாம்)

மராட்டி மொழி நாள் (மகாராட்டிரம்)

விடுதலை நாள் (டொமினிக்கன் குடியரசு, எயிட்டியிடம் இருந்து 1844)

பன்னாட்டு அரசு சார்பற்ற அமைப்புகளின் நாள்