வாலாஜா அறிஞா் அண்ணா அரசு மகளிா் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொண்ட தோ்தல் பொதுப் பாா்வையாளா் எஸ்.வளா்மதி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கா், மேல்விஷாரம், வாலாஜா ஆகிய 5 நகராட்சிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி அறிஞா் அண்ணா மகளிா் கலைக் கல்லூரியிலும், அம்மூா், கலவை, காவேரிப்பாக்கம், நெமிலி, பனப்பாக்கம், தக்கோலம், திமிரி, விளாப்பாக்கம் ஆகிய 8 பேரூராட்சிகளில் பதிவான வாக்குகளை ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியிலும், அரக்கோணம் நகராட்சியில் பதிவான வாக்குகளை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியிலும் எண்ணப்பட உள்ளன.

இதையடுத்து, மாவட்டத் தோ்தல் பொதுப் பாா்வையாளா் எஸ்.வளா்மதி, மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன் ஆகியோா் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தனா்.

அப்போது ஆட்சியா் கூறுகையில், வாக்கு எண்ணிக்கையின் போது, மாவட்டம் முழுவதும் சுமாா் ஆயிரம் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா். நகராட்சி மற்றும் பேரூராட்சி அனைத்து அலுவலா்களும் இப்பணியில் ஈடுபட உள்ளனா் என்றாா்.