ராணிப்பேட்டை சிப்காட் மலைமேடு ஜெ.ஜெ. நகரில் வசித்து வந்த கோவிந்தசாமி (56) என்பவர் திருவலம் அடுத்த சேர்க்காடில் உள்ள ஒரு தனியார் பேப்ரிகேஷன் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை கோவிந்தசாமி வழக்கம் போல் வேலைக்கு சென்றார். இரவு 7.30 மணியளவில் இயற்கை உபாதை கழிக்க எம்பிடி., சாலையை கடந்த போது எதிரில் வந்த பைக் இவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த கோவிந்தசாமியை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்தார்.

இதுகுறித்து கோவிந்தசாமி மகன் இளையரசன் நேற்று காலை திருவலம் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.