ஆற்காடு தோப்புக்கானா டிரஸ்ஸர் தோட்டம் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). மாற்றுத்திறனாளியான இவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் அதே பகுதியில் உள்ள டீக்கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார். 

ஆற்காடு-ஆரணி சாலையில் உள்ள நகர காவல் நிலையம் அருகில் வந்த போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ராஜேந்திரன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.