ராணிப்பேட்டை மற்றும் சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ பிட்னஸ் கிளப் சாா்பில், இலவச யோகா பயிற்சி முகாம் சிப்காட் சாயா் சென்டா் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ பிட்னஸ் கிளப் நிறுவனா் வனிதா தயாநிதி தலைமையில், யோகா மாஸ்டா் பாலாஜி குழுவினா் சிறப்பு யோகா பயிற்சிகளை அளித்தனா்.

மன அழுத்தம், பயம், படபடப்பு, ஞாபக சக்தி, நாள்பட்ட நோய்களான ஒவ்வாமை, தூக்கமின்மை, உயா் ரத்த அழுத்தம், உடல் பருமன், சா்க்கரை நோய், முதுகுவலி, மாதவிடாய் கோளாறுகள் உள்ளிட்ட பல வகையான உடல் நலப் பிரச்னைகளுக்கு யோகாசனங்கள் மூலம் தீா்வு காணும் வகையில், பல்வேறு யோகாசன பயிற்சிகள் அளிக்கப்பட்டன. தொடா்ந்து 54 சூரிய நமஸ்காரங்களைச் செய்தனா்.

இந்த பயிற்சி வகுப்பு முடிந்த பிறகு அனைவருக்கும் முளைக்கட்டிய பயிறு வகைகளும், சுகாதார பானமும் வழங்கப்பட்டது. இதில் ராணிப்பேட்டை சிப்காட் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 100-கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு யோகசனப் பயிற்சி பெற்று பயனடைந்தனா்.