137 நாட்களுக்குப் பின்னர் உயர்ந்த பெட்ரோல் விலை; கேஸ் விலையும் கிடுகிடு 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து காணப்படும் நிலையில், 137 நாட்களுக்கு பின்னர் சென்னையில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை 76 காசுகள் அதிகரித்து 102 ரூபாய் 16 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையில் மாற்றம் இன்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் 50 ரூபாய் அதிகரித்து இன்று 967.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்னர் போக்குவரத்து கழகம், தொழிற்சாலைகளுக்கு நேரடியாக வழங்கப்படும் டீசல் விலையை ரூ.25 உயர்த்தியது. அதன்படி ஒரு லிட்டர் டீசல் ரூ.116.88க்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.