ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்ட மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் கடந்த 1ம் தேதி முதல் பழைய பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் வளாகம் (BSNL), ஆற்காடு சாலை, ராணிப்பேட்டை- 632401 என்ற முகவரிக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள், வேலை வாய்ப்பிற்காக காதிருப்போர், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் புதிய பதிவு, புதுப்பித்தல் மற்றும் கூடுதல் கல்வி தகுதியினை பதிவு செய்துகொள்ளலாம். படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக் கான உதவித்தொகை பெற தகுதி உள்ளவர்கள் அனைவரும் இவ்வலுவலகத்தில் இயங்கும் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பிரிவை நேரில் தொடர்பு காள்லாம் அனைத்து வகையான அரசு போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித் துள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு வேலை வாய்ப்பினை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.