ராணிப்பேட்டை முத்துக்கடையில் சிஐடியு சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் தொழிற்சங்கம் அமைப்பதற்காக தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ததை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்ட தலைவர் காசிநாதன் தலைமை வகித்தார்.

மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் மணி, வெங்கடேசன், நிலவு குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பணி நீக்கம் செய்த தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு எடுக்க வேண்டும். சிப்காட் தொழிற்பேட்டையில் தொழிற்சங்கம் அமைப்போரை பழிவாங்குவதை நிர்வாகத்தினர் கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.