ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மகன் கிஷோர் (20). காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2 ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலுாரில் இருந்து அரக்கோணம் செல்லும் அரசு பஸ்சில் பயணம் செய்தார். பஸ் படிக்கட்டில் பயணம் செய்த அவரை கண்டக்டர் உள்ளே வரச்சொல்லியும் கேட்காமல் படிக்கட்டில் தொங்கியபடி வந்துள்ளார்.

ஆயர்பாடி கிராமம் அருகே உள்ள ஸ்பீட் பிரேக்கில் பஸ் ஏறி இறங்கிய போது எதிர்பாராத விதமாக மாணவர் கிஷோரின் கால் பஸ் படிக்கட்டில் மாட் டிக்கொண்டு நசுங்கியது. இதில் படுகாயமடைந்த அவரை சக பயணிகள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து பஸ் கண்டக்டர் அவளூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் மோகன், சீனிவாசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து 'விசாரித்து வருகின்றனர்.