குறள் : 737

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு

மு.வ உரை :

ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும்  தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.

கலைஞர் உரை :

ஆறு, கடல் எனும் இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத் தொடரும், வருபுனலாம் மழையும், வலிமைமிகு அரணும், ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும்.

சாலமன் பாப்பையா உரை :

ஆற்றுநீரும், ஊற்றுநீரும் உயரமும் அகலமும் உடைய வாய்ப்பான மலையும், மழை நீரும், அழிக்க முடியாத கோட்டையும் நாட்டிற்குத் தேவையான உறுப்புகளாம்.

Kural 737

Irupunalum Vaaindha Malaiyum Varupunalum
Vallaranum Naattirku Uruppu

Explanation :

The constituents of a kingdom are the two waters (from above and below)  well situated hills and an undestructible fort.

Horoscope Today: Astrological prediction for May 01, 2022இன்றைய ராசிப்பலன் - 01.05.2022 | Indraya Rasi Palan


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


01-05-2022, சித்திரை 18, ஞாயிற்றுக்கிழமை, பிரதமை பின்இரவு 03.26 வரை பின்பு வளர்பிறை துதியை. பரணி நட்சத்திரம் இரவு 10.10 வரை பின்பு கிருத்திகை. பிரபலாரிஷ்ட யோகம் இரவு 10.10 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் 

மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. 

இன்றைய ராசிப்பலன் - 01.05.2022 | Today rasi palan - 01.05.2022

மேஷம்

இன்று சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் ஏற்படும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதையும் சமாளிக்கும் திறன் ஏற்படும். நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிட்டும்.

கடகம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபார தொடர்பாக நல்ல நட்புகள் ஏற்படும்.

சிம்மம்

இன்று உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் பொருளாதார சிக்கலை எதிர் கொள்ள முடியும். கடன் பிரச்சினைகள் குறையும். 

கன்னி

இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலை தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

துலாம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த மன கசப்புகள் நீங்கும். ஆன்மீக பயணம் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.

விருச்சிகம்

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் உங்களது முயற்சிகளுக்கு நற்பலன் கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

தனுசு

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் கிட்டும்.

மகரம்

இன்று உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். வியாபாரம் ரீதியான பயணங்களால் அனுகூலங்கள் ஏற்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

கும்பம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். கூட்டாளிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சினைகள் குறையும்.

மீனம்

இன்று தேவையற்ற மன குழப்பம் ஏற்படும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வேலையாட்களால் அனுகூலம் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை தரும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001