மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைமுருகனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
காய்ச்சல் காரணமாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று இரவு சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உள் நோயாளியாக அனுமதிக்கும்படி கூறினர். உடனே துரைமுருகனுக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் அதிகாரபூர்வமாக மருத்துவமனை தரப்பில் செய்திக் குறிப்பு வெளியிடப்படவில்லை. டெல்லி கோப பார்வையில் இருவர்: கனிமொழிக்கு பாய்.. உதயநிதிக்கு ஹாய்! சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் துரைமுருகன் அவைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் பொதுப் பணித்துறையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. சட்டப்பேரவைக்கு செல்வதற்கு முன்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனை சென்று அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். எடப்பாடியை பொதுச் செயலாளராக்கும் சசிகலா: அடுத்து நடக்கப்போவது என்ன?இன்று மாலைக்குள் துரைமுருகன் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.