ராணிப்பேட்டையில் இன்று தொல்காப்பியரின் 2733ம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. 

இதையொட்டி பஜார் வீதியில் நடந்த நிகழ்ச்சிக்கு தமிழ் ஆர்வலரும், அறிவியல் கண்டுபிடிப்பாளருமான மோகனசுகுமார் தலைமை வகித்து இனிப்பு வழங்கினார்.

பிறகு தமிழ்நாட்டில் தனியார் வேலை வாய்ப்பில் 95 சதவீதம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கே வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி கையெழுத்து இயக்கம் துவக்கி வைத்தார். 

சமூக ஆர்வலர்கள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.