அரக்கோணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரும் 10ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில், 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமா படித்த இளைஞர்கள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இலங்கை அகதிகள் ஆகியோர் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

முகாமுக்கு வரும் வேலை நாடுவோர் தங்களது சுயவிவரம், ஆதார் அட்டை, அடையாள அட்டையுடன் கலந்து கொள்ள வேண்டும். தனியார் வேலை வாய்ப்பு முகாமில் வேலை பெறுவோரின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஒரே இடத்தில் கலந்து கொள்ள இருப்பதால் வேலை நாடுவோர் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண் டும். மேலும் விவரங்களுக்கு வட்டார இயக்க மேலாளரை 9787465340 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ் கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.