ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள யோக லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ரோப் கார் வசதியின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2009-ம் ஆண்டு ரோப் கார் வசதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் பல்வேறு காரணங்களால் தாமதாமாகி வந்த கட்டுமானப்பணிகள் சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையில், இன்று சோதனை ஓட்டத்தை அமைச்சர் காந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.