வேலூரில் ஆயுதப்படை போலீஸ்காரர் திடீர் என உயிரிழந்தார்.

Sudden death of an armed policemanராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியை சேர்ந்தவர் வானவர்மன் (வயது 35). இவருடைய மனைவி சுமதி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். வானவர்மன் கடந்த 2008-ம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்தார். தற்போது அவர் வேலூர் ஆயுதப்படையில் மோட்டார் வாகன பிரிவில் எழுத்தராக பணியாற்றி வந்தார்.

அவர் குடும்பத்துடன் ஆயுதப்படை குடியிருப்பில் வசித்தார். வானவர்மன் வழக்கம் போல் பணிக்கு சென்றார். சிறிதுநேரத்தில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் மயங்கி சரிந்து கீழே விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வானவர்மன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வேலூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயுதப்படை போலீஸ்காரர் நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் சக காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.