ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் 20 வயதுக்கு உட்பட்ட புள்ளிங்கோக்கள் அதிவேகமாக பைக் ஓட்டி விபத்தை ஏற்படுத்துவது வாடிக்கையாக உள்ளது.. இந்நிலையில் நேற்று ஒரே பைக்கில் மூன்று புள்ளிங்கோ அதி வேகமாக சென்றனர். அப்போது எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதியது.

இதில் காரின் முன்பக்கம் உடைந்து சேதமடைந்தது. இதனால் கார் ஓட்டுனருக்கும் புள்ளிங்கோக்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து சோளிங்கர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.