பாணாவரம் அடுத்த கோவிந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு (37). கடந்த மாதம் தப்பூர் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டிற்கு வெளியே தனது பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்றவர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது பைக்கை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். பாணாவரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இந்நிலையில் நேற்று பாணாவரம் போலீசார் ரங்காபுரம் ஜங்ஷன் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகத்துக்குரிய வாலிபர் போலீசாரை கண்டவுடன் ஓடமுயன்றார்.

அவரை பிடித்து விசாரித்ததில் காணாமல் போன அன்புவின் பைக்கை திருடிய அரக்கோணம் அடுத்த மோசூர் கிராமத்தை சேர்ந்த ரமணன் (23) என்பது தெரியவந்தது. 

அவரை சோளிங்கர் கோர்ட்டில் ஆஜர்செய்து அரக்கோணம் சப் ஜெயிலில் போலீசார் அடைத்தனர்.