குறள் : 741

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்

மு.வ உரை :

(படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும் (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னை புகழிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும்.

கலைஞர் உரை :

பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும்.

சாலமன் பாப்பையா உரை :

பிறர்மேல் படை எடுத்துச் செல்பவர்க்கும் சிறந்தது அரண்; பிறருக்குப் பயந்து உள்ளிருப்பவர்க்கும் அதுவே சிறந்தது.

Kural 741

Aatru Pavarkkum Aranporul Anjiththar
Potru Pavarkkum Porul

Explanation :

A fort is an object of importance to those who march (against their foes) as well as to those who through fear (of pursuers) would seek it for shelter.

Horoscope Today: Astrological prediction for May 05, 2022

இன்றைய ராசிப்பலன் - 05.05.2022 | Indraya Rasi Palan


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam 

05-05-2022, சித்திரை 22, வியாழக்கிழமை, சதுர்த்தி திதி பகல் 10.01 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் காலை 06.16 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம்

மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

இன்றைய ராசிப்பலன் - 05.05.2022 | Today rasi palan - 05.05.2022

மேஷம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். அசையா சொத்துகள் வழியில் அனுகூலம் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் பாதிப்புகள் குறையும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். நெருங்கியவர்களால் நன்மை ஏற்படும்.

ரிஷபம்

இன்று பிள்ளைகளால் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள்.

மிதுனம்

இன்று பிள்ளைகளால் பெருமை அடையப் போகிறீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும்.

கடகம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் சிக்கல்கள் குறையும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நவீன பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். சிறப்பான பணவரவால் உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். 

சிம்மம்

இன்று இல்லத்தில் இனிய செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். கடன்கள் வசூலாகும். பிள்ளைகள் மூலம் அனுகூலப் பலன் அடைவீர்கள்.

கன்னி

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குறைவு இல்லாமல் இருக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். பொது நல காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் கொடுத்த கடன்கள் வசூலாகும். பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும்.

துலாம்

இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படலாம். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்ககூடும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு அமையும். 

விருச்சிகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பம் அதிகமாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. 

தனுசு

இன்று உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை அதிகமாகும். வீட்டில் சுப பேச்சுக்கள் நற்பலனை தரும். வியாபாரம் ரீதியான உங்களது புதிய செயல்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். செலவுகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் நற்பலன்கள் உண்டாகும்.

மகரம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். நினைத்த காரியம் நிறைவேறும்.

கும்பம்

இன்று உங்களுக்கு உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம். தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நற்பலன்களை அடையலாம்.

மீனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடலில் வலிகள் வந்து நீங்கும். சேமிப்பு குறையும். மதி நுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். நண்பர்கள் உங்கள் தேவைவை அறிந்து உதவுவார்கள். சுபகாரியங்கள் கைகூடும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001