மனிதனுக்கு எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது உடல் எடையும், தொப்பையும் தான். அதிலும் தொப்பையை குறைப்பதென்பது இன்று மிகப்பெரிய போராட்டமான விஷயமாக உள்ளது.

ஒரு சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் பருமனோ, தொப்பையோ வராது. காரணம் அவர்கள் உடம்பில் இயல்பாகவே காரத்தன்மை அதிகமாக இருக்கும். ஆனால், ஒரு சிலர் குறைந்த அளவு சாப்பிட்டாலும் தொப்பையை குறைக்க முடியாது. காரணம் அவர்கள் உடம்பு பித்த உடம்பாக இருக்கும். நாம் உட்கொள்ளும் உணவில் அமிலத்தன்மை அதிகமாக இருந்தால் அதனை உடல், கொழுப்பாக மாற்றி சேமிக்கிறது. இதுவே தொப்பையாக மாறி விடுகிறது.

இந்த கொழுப்பினை கரைக்க மிகச்சிறந்த வழி இஞ்சியை உட்கொள்வது தான்.

எனவேதான் பாரம்பரியமாக இஞ்சி மரப்பா போன்ற பண்டங்கள் நம் வழக்கத்தில் இருந்தது. இஞ்சியினை உட்கொள்ள மற்றொரு சிறந்த வழி இஞ்சிச்சாறு. நாட்டு சர்க்கரை மற்றும் மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து மாலை காபிக்கு பதில் அருந்தி வந்தால் உடம்பில் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் பருமன் மற்றும் தொப்பையை எளிமையாக குறைக்கலாம்.