பட்டா வழங்கியதில் முறைகேடா? 12 வாரத்தில் அறிக்கை அளிக்கணும்

முதியவருக்கு சொந்தமான இடத்தின் ஒரு பகுதியை போலி பட்டா தயாரித்து தன்னுடைய மகன் பெயருக்கு மாற்றி ஷயதில் சட்ட விரோதம் இருந்தால் விசாரணை நடத்த ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆட்டுப்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் முதியவர் தட்சிணா மூர்த்தி என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது 1994ம் ஆண்டு தமிழக அரசு கிராம நத்தம் நிலத்தில் 792 சதுர மீட்டர் பரப்பளவில் பட்டா வழங்கியது. அந்த நிலத்தில் ஓலை வீடு அமைத்து மண்பாண்டம் தொழில் செய்து வந்தேன். நிலத் தின் அருகே இருக்கும் சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான 900 சதுரடி நிலத்தை விலைக்கு வாங்கினேன்.

இந்த நிலையில், கிராம நிா்வாக அதிகாரியின் உதவியுடன் நிலத்தில் ஒரு பகுதிக்கு சுப்பிரமணியன் போலி பட்டா வாங்கி தன் மகன் பெயருக்கு அந்த நிலத்தை பத்திரபதிவு செய்துள்ளாா். இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பட்டா குறித்து அரசு ஆவணத்தில் எந்த விவரமும் இல்லை. எனவே, சுப்பிரமணியன் தன் மகன் பெயருக்கு செய்து கொடுத்த பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த புகாா் மனுவை விரைவாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.