அரக்கோணம் யார்டில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் வரும் 17 மற்றும் 18ம் தேதி எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் யார்டில் வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் காலை 9.45.மணி முதல் பகல் 1.45 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது.

இதனால் இந்த 2 நாட்களும் இரு மார்க்கத்திலும் பெங்களூரில் இருந்து லால்பாக்

சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் (12608/12609), கோயம் புத்துாரில் இருந்து சென்னை செல்லும் இன் டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (12680/12679), மைசூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்(12610), சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் (12607)ஆகிய ரயில்கள் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் அரக்கோணம், சென்னை சென்ட்ரல் செல்லாது என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல் திருப்பதியில் இருந்து சென்னை செல்லும் (16054/16053 சப்தகிரி எக்ஸ்பிரஸ் 17 மற்றும் 18 தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

ஜார்க்கண்ட் மாநிலம் தானாபூரில் இருந்து பெங்களூர் செல்லும் ரயில் ரேணிகுண்டா, திருத்தணி, வழியாக செல்லும். பெரம் பூர்செல்லாது. அதேபோல் அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் சில மின்சார ரயில்களும் கடம் பத்தூரில் இருந்து இயக்கப்படுகிறது.

இவ்வாறு தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.