ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த சாம்பசிவபுரத்தை சேர்ந்தவர் சரவணகுமார் என்கிற பண்ணுகுமார் (வயது 34). இவர் சாராயம் விற்றதாக ராணிப்பேட்டை மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, தனிப்படை அமைத்து, சரவணகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தார்.

மேலும் இவரின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, சரவண குமாரை குண்டர் சட்டத்தில் அடைக்க, ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்று சரவணகுமாரை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர்பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.