ராணிப்பேட்டை பாரதி நகரில்  ₹12 கோடிமதிப்பில் புதிய எஸ்பி அலுவலக கட்டிட பணிகளை எஸ்பி ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை பாரதிநகரில் 12கோடியே 2 லட்சத்து 51ஆயிரம் மதிப்பில் புதிய எஸ்பி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை எஸ்பி தீபாசத்யன் நேற்று மாலை 6 மணி அளவில் திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது, புதிய எஸ்பி அலுவலக கட்டிடம் எத்தனை ஏக்கர் பரப்பளவில் உள்ளது. அலுவலகத்தில் எந்தெந்த வேலைப்பாடுகள் என்னென்ன பணிகள் நடந்து வருகின்றன என கேட்டறிந்தார். இதற்கு ஒப்பந்ததாரர் 5.11 ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலத்தில் புதிய எஸ்பி அலுவலக கட்டிடம் 31 சென்டில் கட்டப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு துரித பணிகள் நடந்து வருகிறது. கட்டிடம் ஒப்பந்த காலம் 11 மாதங்கள் எனவும், பணி துவங்கிய கடந்தாண்டு 7ம் மாத்திலிருந்து அடுத்த மாதம் எனவும், மேலும், 3 மாதங்கள் கூடுதலாக அவ காசம்கேட்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். ஆய் வின்போது, டிஎஸ்பி பிரபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்ணாமலை, தாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.