தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து தீராக்காதல் திருக்குறள் ' என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகளை தமிழ் இணையக் கல்விக் கழகம் வாயிலாக நடத்தின.

அவ்வகையில் மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக் கென குறளோவியம் எனும் பெயரில் ஓவியப் போட்டிகள் நடந்தது.

இப்போட்டியில் சிறந்த 365 ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு, முதல் 3 இடங்களை பெற்ற கல்லுாரி மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசு வழங்கினார்.

மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்று சிறப்பு பரிசு பெறும் மாணவர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரமும் 319 மாணவர்களுக்கு ஊக்க பரிசு தாலா ரூ ஆயிரம் மற்றும் அனை வருக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்த போட்டியில் கலந்து கொண்ட ராணிப்பேட்டை மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

அப்போது கலெக்டர் பாஸ்கரபாண்டியன் ஆற்காடு ஜி.வி.சி. பள்ளி 11ம் வகுப்பு மாணவன் விக்னேஷ் என்பவருக்கு ரூ.5 ஆயிரமும், வாலாஜா அரசு மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவி மீனாட்சி, அரக்கோணம் எஸ்எம்எஸ் விமல் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவன் வாலாஜா மகிழன், பிரைட் மைண்ட்ஸ் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி பிரித்விகா, ஆற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 11ம் வகுப்பு மாணவன் திருமுருகன், ஆற்காடு மகாலட்சுமி கல்லுாரி மாணவிகள் சந்தியா, சக்தி, சென்னை தொலைதூர கல்வி நிறுவனம் மாணவி சுகன்யா ஆகியோருக்கு தலா ரூ. ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.