தண்ணீர் குடிப்பதின் அளவு மற்றும் முறைகள் என்ன ? What are the quantities and methods of drinking water?

வயது / சாப்பிட்ட உணவு / கால சூழ்நிலை‌/ நாம் பார்க்கும் வேலை / நோய் /இவைகளைப் பொறுத்து தண்ணீர் குடிப்பதின் அளவும் மாறுபடுகின்றது.

சிலர் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்தால் இந்த நன்மை அந்த நன்மை என்று கூறுவார்கள் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை எந்த அளவு நமக்கு தாகம் எடுக்கிறதோ அந்த அளவிற்கு நாம் தண்ணீர் குடிக்க வேண்டும் அதை நமது உடலே தீர்மானிக்கும் காலையில் நமக்கு அதிக அளவு தாக்கம் இருக்காது அதனால் அதிகபட்சம் 200 எம்எல் தண்ணீர் குடித்தால் போதுமானது காரணம் தண்ணீரும் உடலில் ஜீரணம் ஆக வேண்டும். 

இட்லி சாப்பிட்ட பிறகு தண்ணீர் அதிகம் தேவைப்படாது அப்போது அளவை குறைத்துக் குடிக்கலாம் அதே நேரம் மதியம் ஒரு விருந்துக்கு சென்று பிரியாணி சாப்பிட்டு இருக்கின்றோம் என்றால் அதிக அளவு தண்ணீரை நமது உடலே தாகத்தின் மூலமாக கேட்க்கும் அப்போது நாம் அதிக அளவு தண்ணீர் குடிக்கலாம் பொதுவாகவே எண்ணை மசாலா கலந்த உணவுகளை நாம் சாப்பிடும் போது ஜீரணத்திற்கு அதிக அளவு தண்ணீர் தேவைப்படும் அப்போது நாம் குறைவாக தண்ணீர் குடித்தால் அஜீரணக் கோளாறுகளும் வேறு வேறு நோய்களும் ஏற்படும். 

சில நாட்கள் நாம் கடினமான வேலைகளைச் செய்வோம் அப்போது நாம் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் வீட்டில் ஓய்வில் இருக்கின்றோம் என்றால் அதிக அளவு குடிக்க வேண்டிய அவசியம் இல்லை. 

அதேபோல் இரவு 10மணிக்கு மேல் அதிக அளவு தண்ணீர் குடித்தால் நமது தூக்கத்தை கெடுக்கும் இரண்டு மணி அல்லது மூன்று மணி வாக்கில் சிறுநீர் கழிக்க வேண்டிய சூழல் ஏற்படும். 

சாப்பிட்ட பிறகு 40 நிமிடங்கள் கழித்துதான் தண்ணீர் குடிக்க வேண்டும் சாப்பாட்டிற்கு இடைஇடையே தண்ணீர் குடிக்கக்கூடாது அப்போது தான் உணவு எளிதாக ஜீரணமாகும் சாப்பிட்டதும் தண்ணீரை அதிகம் குடித்தால் வயிற்றில் ஜீரண அமிலம் நீர்த்துப் போகும் அதனால் ஜீரணம் நடைபெறுவது பாதிக்கும் சிறிதளவு தண்ணீர் குடித்துக் கொள்ளலாம். 

தண்ணீர் குடிக்கும் போது வாயை ஆவென திறந்து குடிப்பதும் தவறு கடகடவென குடிப்பதும் தவறானது உட்கார்ந்து மிடறு மிடறாக குடிப்பதே சரியானது‌ தண்ணீரை இலேசாக கொப்பளித்து குடித்தால் இன்னும் நலமானது.