ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டியில் வசிக்கும் அண்ணாமலை என்பரின் மகன் திலீப்குமார் (27) கூலித்தொழிலாளி நேற்று இரவு 12 மணி அளவில் நண்பர்களுடன் குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவுக்குச் சென்று பைக்கில் வீடு திரும்பிய நிலையில் கில்முருங்கை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புக் கம்பியின் மீது மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது இந்நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் உயிர் இழந்துள்ளனர் இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உடலை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பின்னர் அச்சம்பவத்தை குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.