காட்பாடி அடுத்த தலங்கை- சோளிங்கர் ரயில் தண்டவாளத்துக்கு இடைப்பட்ட ரயில்வே தண்டவாளப்பகுதியில் அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடப்பதாக காட்பாடி ரயில்வே போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காட்பாடி ரயில்வே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில்: இறந்த நபர் 60 முதல் 65வயது உடையவராக உள்ளார்.

அவர் பெயர், ஊர், விலாசம் குறித்து ஏதும் தெரியவில்லை. தண்டவாளத்தை கடக்கும் போது அந்த வழியாக சென்ற ரயில்மோதி இறந்து இருக்கலாம் என தெரிகிறது. இறந்த வரை பற்றி தகவல் தெரிந்தால் 94981 01961 எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என போலீ சார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.