காட்பாடி அருகே உள்ள தாராபடவேடு பகுதியை சேர்ந்தவர் பலராமன் என்கிற பாலா (வயது 27). இவரை கடந்த 11-ந்தேதி ராணிப்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவா் மீது காட்பாடி, திருவலம், விருதம்பட்டு, அரக்கோணம், ஆற்காடு, வாலாஜா, ராணிப்பேட்டை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. 

இந்த நிலையில் பலராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் பலராமனை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.