ஆற்காடு அடுத்த புதுப்பாடியிலிருந்து ராணிப்பேட்டை தனியார் ஷூ கம்பெனிக்கு 15க்கும் மேற்பட்ட பெண் வேலையாட்களை ஏற்றிக்கொண்டு நேற்று (31. 05. 2022) காலை சென்று கொண்டிருந்தது.
ஆற்காடு அடுத்த பூங்கோடு அருகே வந்தபோது வேனின் இடதுபுற பின்பக்க டயர் வெடித்தது. இதில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 7 பெண்கள் லேசான காயமடைந்தனர்.
அவர்கள் வாலாஜா அரசு மருத்துவமனை மற்றும் ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.