ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அன்சாரி (57). இவரது மகன் அப்ராத் (35).

இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக வேலூரில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உதவியாக அன்சாரியும் தங்கியிருந்தார்.

சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் ஜார்கண்ட் செல்ல தன்பாத் எக்ஸ்பிரசில் புறப்பட்டனர்.

ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் அன்சாரிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

ஆனால், வரும் வழியிலேயே அன்சாரி இறந்துவிட்டார். இதுகுறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.