வாலாஜாபேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் 97.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்வு எழுதிய 441 மாணவிகளில் 423 பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளியின் முதலாவதாக மாணவி சங்கரி 578 மார்க்கும், 2வதாக தமிழ்ச்செல்வி 570, 3வதாக லீலா 568 மார்க்குகள் வாங்கியுள்ளனர்.

இப்பள்ளியை சேர்ந்த லீலா கணிதத்தில் 100 மார்க் பெற்றுள்ளார். இதே போன்று வேதியியலில் தமிழ்ச்செல்வியும், உயிரியலில் சங்கரியும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் ஷாலினிபிரியாவும் நூறு மார்க் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இப்பள்ளியில் 10ஆம் வகுப்பு அரசுபொதுத்தேர்வில் 91 சதவீதம் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 349 மாண விகளில் 317 பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளியின் முதலாவதாக மாணவி சத்யபிரியா 472 மார்க்கும், 2வதாக ஆதிலட்சுமி 461, 3வதாக கிருத்திகா 448 மார்க்குகள் வாங்கியுள்ளனர்.

முதலாம் மாணவி சத்திய பிரியா அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மார்க்கு வாங்கியுள்ளார்.

அரசுத்தேர்வில் சாதனை படைத்த மாணவிகளை பள்ளியின் பிடிஏ தலைவர் தசரதன், தலைமை ஆசிரியை ஜெய லட்சுமி மற்றும் ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.