சர்வதேச அளவில் டாலருக்கான மதிப்பும், அதன் பரிவர்த்தனை மீதான மதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில், டாலருக்கு எதிரான கரன்சி மதிப்பை நிலை நிறுத்தும் நோக்கில், ஆர்பிஐ வங்கியும் பல முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது.

எனினும், ஆர்பிஐ எடுக்கும் நடவடிக்கைகள் எல்லாம் உடனடியாக பெரிய அளவில் பலன்கள் கொடுப்பதில்லை. டாலருக்கு எதிரான ரூபாய் என்பதையும் தாண்டி சென்று இறக்குமதியாளர்களின் வயிற்றில் ஒரு புளியை கரைத்துச் சென்றிருக்கிறது.

ஏற்றுமதியாளர்கள் இறக்குமதி யாளர்கள் இதுவரை பெரும்பாலும் அந்நியச் செலாவணியிலேயே தங்களது இன்வாய்ஸ்களை அளித்து வந்தார்கள். இனிமேல் ரூபாயிலும் இறக்குமதி ஏற்றுமதி இன்வாய்ஸ்களை அளிக்கலாம் என்று அதற்கான விதிமுறைகளை ஆர்பிஐ கொண்டு அடிப்படையில் வலுப்பெறச் செய்யும்.

அமெரிக்காவில் முன் எப்போதும் இல்லாத வகையில் பணவீக்கம் உயர்ந்து கொண்டிருக்கிறது. கிட்டதட்ட 9 சதவீதம் என்ற அளவைக் கடந்துள்ளது. இது அமெரிக்காவின் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத ஒரு நிலை என்பதால், அங்கு வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளன. இதனால்தான், அமெரிக்காவில் முதலீடு செய்வது லாபம் என்ற நோக்கில், பல முதலீட்டு நிறுவனங்கள் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் சந்தைகளில் இருந்து, தங்கள் முதலீடுகளை திரும்ப எடுத்துச் செல்கின்றனர். இதனால்தான் நம் நாட்டின் பங்குச் சந்தைகளில் தொடர்ந்து ரோலர் கோஸ்டர் ஆட்டம் நீடிக்கிறது. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது. பெனி, நடப்பு நிதியாண் டின் முதல் காலாண்டில் எதிர்பார்த்த லாபகரமான முடிவகளை கொடுக்கவில்லை. இதனால், பெரும்பாலான ஐடி நிறுவனங்களின் பங்குகள், இந்த வாரத்தில் சரிந்தன. சந்தைகள் இந்த வாரம் கீழே இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

வர்த்தக முடிவு நாளில் 

பங்கு சந்தையின் வாராந்திரவர்த்தக முடிவு நாளான வெள்ளிக்கிழமையில் மும்பை சந்தை 344 புள்ளிகள் உயர்ந்து 53,760 புள்ளிகளுடனும், தேசிய பங்குசந்தை 110 புள்ளிகள் உயர்ந்து 16,409 புள்ளிகளுடனும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. கடந்த வாரத்தில் மும்பை பங்குச் சந்தையின் வர்த்தகம் 721 புள்ளிகள் வரை குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், இந்த சரிவிலும் ஐடி பங்குகள் 11.23 சதவீதம்,
இங்கர்சால் ராண்ட் பங்குகள் 8.51 சதவீதம், அபார் இண்டஸ்டீரீஸ் பங்குகள் 7.92 சதவீதம், அஸ்டர் டி.எம். ஹெல்த்கேர் பங்குகள் 7.47 சதவீதம் உயர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

காலாண்டு முடிவுகள்

பெடரல் பேங்க், ஜிந்தால் ஸ்டீல், ஓபராய் ரியாலிட்டி. எல் அண்ட்டி டெக்னாலஜி, பட்டர்ப்ளை காந்திமதி அப்ளையன்ஸ், டாட்டா ஹெலிக்சி, எல் அண்ட் டி இன்போடெக், குளோபல் எஜூகே ஷன், டெல்டா கார்ப்பரேஷன், ஆன்ந்த்ரத்தி ஆகிய கம்பெனிகள் சென்ற ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு நிதி யாண்டின் முதல் காலாண்டில் சிறப்பான காலாண்டு முடிவுகளை கொடுத்துள்ளன.

என்ன பங்குகள் வாங்கலாம்?

டெக்னோ எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், ஏசிசி லிமிடெட், லார்சன் அன்ட்டூப்ரோ, மைண்ட் ட்ரீ, ஹெச்.சி.எல் இண்டஸ்ட்ரீஸ், சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் ஆகியவை உங்கள் நீண்ட கால போர்ட்போலியோவில் இருக்கலாம். 

ரூபாய் மதிப்பு இழப்பு என்ன செய்யும்?

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு இழப்பு நமது அத்தியாவசியமான இறக்குமதி பொருட்கள் மீதான விலைகளை உயர்த்தும். அதாவது கச்சா எண்ணை, வைரம், தங்கம், தொலை தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றின் விலை உயரும். ஒரு ஆறுதல் என்னவென்றால் உலக அளவில் கச்சா எண்ணையின் விலை குறைந்திருக்கிறது. இதனால் டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு இழப்பு பெட்ரோல் விலையை பெரிய அளவில் கூட்டவில்லை.

அடுத்த வாரம் எப்படி இருக்கும்?

டாலருக்கு எதிரான கரன்சி மதிப்பை நிலைப் படுத்தும் முயற்சியில் ஆர்பிஐ வங்கி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், இந்த நடவடிக்கைகள் பலன் கொடுக்க சிறிது காலம் ஆகலாம். நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சந்தைகளுக்கு பெரிய அளவில் சாதகமாக இல்லை. அதேநேரத்தில், பல வெளிநாட்டு முதலீட்டு தங்கள் பணத்தை எடுத்துச் செல்வ தால், சந்தைகள் மந்த நிலையில் இருக்கும்.