விட்டம் கழிந்த எட்டாம் நாள் வீடுதோறும் நாம் கொண்டாடும் கிருஷ்ண ஜெயந்தி விழா சீடை, முறுக்கு , தட்டை போன்று எல்லாமே கறமுர , நர நர சத்தத்துடன் சாப்பிடும் தின்பண்டம் 

கிருஷ்ண ஜெயந்தியன்று வீடுகளில் சீடை, முறுக்கு என்று நிவேதனம் செய்கிறோம்.

இதற்குக் காரணம், கிருஷ்ணபகவான், நள்ளிரவு வேளையில் சிறையில் அவதரித்தார். இந்தத் தகவல் கம்சனுக்குத் தெரிந்தால் ஆபத்தாயிற்றே! எனவே கண்ணன் பிறந்ததும் மேளதாளம் முழங்கவில்லை.

ஆனால் கண்ணன் பிறந்த நேரத்தில் துர்சொப்னம் கண்டான் கம்சன். அதன் காரணமாக தூக்கத்திலேயே பற்களை நறநறவென்று கடித்தான். இந்தச் சத்தமே பகவான் கண்ணன் அவதரித்த தற்கான மங்கல ஒலியானதாம்.

இதை உணர்த்தவே கடித்தால் நறநறவென்று சத்தம் கேட்கும் சீடை, முறுக்கு உள்ளிட்ட பட்சணங்களை கிருஷ்ண ஜெயந்தியன்று நிவேதனம் செய்கிறோம்.