ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

Ranipet road accident: Funds for families of victimsராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர்-அரக்கோணம் சாலையை ஒட்டிய பகுதியில் புதூர் கண்டிகையைச் சேர்ந்த சீனிவாசன், எஸ்.ஆர்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த உண்ணாமலை, கன்னியப்பன் ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாகச் சென்ற கார் எதிர்பாராத விதமாக மோதியதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இந்தச் செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். விபத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.