மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 வயது முதல் 45 வயதுவரை வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு சுயதொழில் செய்வதற்கு 30 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஏ.சி., பிரிட்ஜ் பழுது பார்ப்பதற்கு அளிக்கப்படும் இந்த இலவச பயிற்சி வகுப்புகள் செப்டம்பர் 29ம் தேதி துவங்கப்படவுள்ளது.
தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நடக்கும் இந்த பயிற்சி வகுப்பில் பயிற்சி பொருட்கள், காலை மாலை சிற்றுண்டி, மதிய உணவு இலவசம். பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்று வழங்கப்படும்.

இந்த சான்றை வைத்து சுயதொழில் துவங்கலாம். வங்கி கடன் வாங்கி கடை நடத்தலாம்.

பயிற்சியில் சேர விரும்புவோர் ராணிப்பேட்டை நவல்பூர் எம் எப் சாலையிலுள்ள இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி நிறுவனத்தை நேரில் அணுகி விபரம் பெறலாம்.

இத்தகவலை பயிற்சி நிறுவன இயக்குநர் துர்காபிரசாத் தெரிவித்துள்ளார்.