அரக்கோணம் அடுத்த கீழ்குப்பம், அன்னை மூகாம்பிகை நகரை சேர்ந்த ஜெயகுமார்(42). ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்.

இவர் நேற்று ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது: 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு எங்கள் பகுதியை சேர்ந்த யோகந்தத் என்ப வரிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருந்தேன். அதற்காக எங்களுக்கு சொந்தமான வீட்டை யோகந்தத் அபகரிக்க முயன்றார்.

நான் வீட்டில் இல்லாதபோது என் அம்மா மற்றும் மனைவி, மகன் ஆகியோரை வெளியே துரத்தி, வீட்டை பூட்டியுள்ளார். சுமார் 45 நாட்களாக அவரது கட்டுப்பாட்டுக்குள் வீட்டை பூட்டி வைத்துள்ளார்.

என் வீட்டில் இருக்கும் பணம், நகைகள்,வீட்டுமனை பத்திரம், சான்றிதழ்கள், அடையாள அட்டை, குடும்ப அட்டை, வங்கி புத்தகம், ரூ 20 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் வீட்டின் உள்ளே உள்ளது.

இதுபற்றி அரக்கோணம் டிஎஸ்பியிடம் புகார் அளித்தேன். அதற்கு போலிசார் கந்து வட்டி விடும் யோகந்தத்தை அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டு சாவியை என்னிடம் கொடுப்பதாக போலீசார்டம் உறுதி அளித்தார். ஆனால் என்னிடம் வீட்டு சாவியை கொடுக்காமல் அலைக்கழித்து வருகிறார். எங்கள் குடும்பத்துக்கு கொலைமிரட்டல் விடுக்கிறார். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.