சிப்காட் அருகே உள்ள புளியங்கண்ணு கிராமம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ஜெய்சங்கர் (40), பைக் மெக்கானிக். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களுடன் சுஜாதா என்ற சகோதரியும் வேணுகோபால் என்ற சகோதரனும் உள்ளனர்.

இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக ஜெய்சங்கர் மன வேதனையில் இருந்துவந்தாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று புளியங்கண்ணு கிராமம் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான கிணறு அருகே விஷம் குடித்து சடலமாக கிடந்துள்ளார். 

இது குறித்து இறந்த ஜெய்சங்கரின் மனைவி சரஸ்வதி நேற்று மாலை சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பொறுப்பு பார்த்தசாரதி சப்-இன்ஸ்பெக்டர் ஜான் சேவியர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.