ஆப்பிள்... இது பல்வேறு ஊட்டச் சத்துக்கள் நிறைந்த பழம். இது மரத்தில் காய்க்கும் கனியாகும். ஆப்பிள் மரம் சிறிய இலையுதிர் மரமாகும். இவை சுமார் 5-15மீ உயரம் வரை வளரக்கூடியதும், பரந்த கிளைப்பகுதிகளை கொண்டதாகவும் உள்ளது. ஆப்பிள் பழம் இலையுதிர் காலத்தின் போது முதிர்ச்சி அடைகின்றன. இவற்றின் தோல் மெல்லியதாகவும், பழச்சதை உறுதியாகவும் இருக்கும். உட்பகுதியில் சில சிறு விதைகளை கொண்டிருக்கும். ஆப்பிள் முதன்முதலில் மத்திய ஆசியாவில் தான் பயிரிடப்பட்டது. தற்போது பெரும்பாலும் உலகின் அனைத்து குளிர் பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது.

ஆப்பிள்களில் சுமார் 7,000-க்கும் அதிகமான ரகங்கள் உள்ளன. தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு ரகங்களும் பயிரிடப் படுகின்றன. விளைவிக்கப்படும் ரகங்களையும், இடங்களையும் பொருத்து இவற்றின் சுவையில் வேறுபாடுகள் ஏற்படுகின்றன. வெவ்வேறு பகுதி மக்கள் வெவ்வேறு விதமான சுவை கொண்ட ஆப்பிள்களை விரும்புகின்றனர். வட அமெரிக்கா மற்றும் ஐரோப் பாவில் பெரும்பாலும் புளிப்பு சுவை குறைவான பழங்கள் விரும் பப்படுகின்றன. ஆசியாவில் குறிப்பாக இந்தியாவில், மிக இனிப் பான ஆப்பிள்கள் விரும்பப் படுகின்றன. ஆப்பிள்கள் பெரும்பா லும் பழமாக உண்ணப்படுகிறது. இதனை தவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பயன்படுத்தியும், குளிர்பானமாக தயாரித்தும் உட் கொள்ளப் படுகிறது.

ஆப்பிள்களில் புற்றுநோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதயம் சம்பந்தமான நோயினால் பாதிக் கப்பட்டவர்களுக்கும் இது சிறந்த உணவாக கருதப்படுகிறது. ஆப்பிளில் உள்ள சில வேதிப்பொருட்கள் இயற்கையாகவே ஆக் சிஜனேற்ற தடுப்புச்சக்தி உடையவை என்பதால் மூளை நரம்பு பாதிப்பில் இருந்து பாதுகாக்கின்றன. இதனை அதிகமாக சாப்பிட் டால் கண்புரை நோய் ஏற்படுவதை தடுக்கலாம். எடைக் குறைவு, கொழுப்புச்சத்துகுறைவு ஆகியவற்றிற்கும் உதவுகிறது. இதனால் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளையில் நோய் தாக்கம் ஏற்படும் வாய்ப்பும் மிக குறைவு. இதில் உள்ள அமிலங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.

2020-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி ஆப்பிள் உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா 2-வது இடத்திலும் உள்ளது. இவ்வாறு பல்வேறு சத்துக்களையும், நோய்களுல் இருந்து பாது காக்கும் மருந்தாகவும் பயன்படும் ஆப்பிள்களின் தேவையை உணரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 6-ந் தேதி(இன்று) ஆப்பிள் மர தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.